பசி அறிந்ததில்லை
தூக்கம் மறந்ததில்லை
துக்கம் வந்ததில்லை
அன்புக்குக் குறைச்சல் இருந்ததில்லை
தனிமையில் இருந்ததில்லை
கண்களில் ஒரு துளி நீர் வந்ததுமில்லை.....
அம்மா இருந்தவரை......
அம்மா இருந்தவரை......
என் அம்மாவே.....!
சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சின்னதாய் நான் விட்ட சிறு தவறுக்கு
சிறு தடி எடுத்து
சின்னதாய் ஓர் அடி அடித்துவிட்டு...
சின்னப் பிள்ளைத்தனமாய் நீ அழுவாயே தாயே......
என் செல்லமே என் செல்லமே என்று
செல்லமாய் தினமும்
கொஞ்சி மகிழ்வாயே......
உன் செல்லம் எவ்வளவு கெஞ்சியும்
நீ துயில் கொண்டு விட்டாயே...... என் அம்மாவே....
சின்னதாய் நான் விட்ட சிறு தவறுக்கு
சிறு தடி எடுத்து
சின்னதாய் ஓர் அடி அடித்துவிட்டு...
சின்னப் பிள்ளைத்தனமாய் நீ அழுவாயே தாயே......
என் செல்லமே என் செல்லமே என்று
செல்லமாய் தினமும்
கொஞ்சி மகிழ்வாயே......
உன் செல்லம் எவ்வளவு கெஞ்சியும்
நீ துயில் கொண்டு விட்டாயே...... என் அம்மாவே....
Subscribe to:
Posts (Atom)