யாரடி நீ மோகினி....?

புத்தம் புதிதாய்
மொட்டவிழ்ந்த மலராக
எனக்குள்ளே மலர்ந்த
என் கொடி மலரோ நீ.... கொடி பிடித்து
என் நினைவில்
ஊஞ்சல் கட்டி ஆடிடும்
தேவதையோ நீ...

பொழுது சாய்ந்திட
என் முற்றம்
தேடி வரும்
வெண்ணிலவோ நீ...

உறங்கும்போது
என்னைத் தாலாட்ட
ஓடிவரும்
பஞ்சணைத் தென்றலோ நீ...

மொத்தத்தில்
எனை ஆளவந்த
என்
அன்புக் காதலியோ நீ.......


No comments:

Post a Comment