காதல் செய்து பார்...!
காதல் செய்து பார்
அப்போது புரியும்
அதன் தெய்வீகம்
இல்லையேல்
உன் கண்களுக்கு
அது வெறும் காமமே...
காதல் செய்து பார்
கவிதைகள் பல வரைவாய்
அதில் பல அர்த்தங்கள் அறிவாய்
இல்லையேல்
கவிதைகளும் உனக்கு புரியாது
கவிஞர்களையும் பைத்தியம் என்பாய்...
காதல் செய்து பார்
இயற்கையை தினம் ரசிப்பாய்
அதில் பல அற்புதங்கள் காண்பாய்
இல்லையேல்
வெறும் நடை பிணமாய் நீ அலைவாய்
கண்களில் தெரிவன எதையும் ரசியாய்...
No comments:
Post a Comment