உனக்குப் பைத்தியமடி...!

சின்னச் சின்ன
சண்டைகள் பிடிப்பாயே
உன்மீது எனக்கு
அக்கறையில்லை என்று...
என் மனம் குளிர்ந்திடுமே
அந்தக் கணம்
என்னிடம் நீ எதிர்பார்க்கும்
அன்பை எண்ணி...........

இன்னொரு பெண்ணுடன்
பேசாதே என்று
உனக்கு வருமே கோபம்
ஆதலால்,
உன் மீது
எனக்குக் கூடுமே
காதல் தாகம்
என் மீதான
உன் பைத்தியத்தை எண்ணி..........

No comments:

Post a Comment