எங்கள் வீட்டுப் பாலகா... பாலச்சந்திரா....!

நொறுக்க பிஸ்கட் கொடுத்து
பாலகனென்றும் பாராது
சன்னங்களால்
சின்ன நெஞ்சை நொறுக்கிய
படுபாவிக் கூட்டங்களே! உங்களுக்கு நிச்சயம்
உண்டு மரண தண்டனை!!

இந்தப் பாரிலே இப்படியொரு
அசுரக் கூட்டமா என
நெஞ்சப் பதபதைக்கிறது
இந்தப் பாலகனின்
பால் முகத்தைப் பார்க்கும்போது...

உலக நாடுகளே!
நிச்சயம் இதற்கு நீங்கள்
பதில் சொல்லியே ஆகவேண்டும்...
இந்தக் கொடூரம் நடக்கையில்
மௌனம் காத்தீர்களே!!!
இந்தக் கணமாவது உங்கள்
கல் நெஞ்சம் இளகலையோ....
இல்லையேல்
நீங்களும் இதற்கு
காரண கர்த்தாக்களோ...
அதுதான் உங்களால்
இதற்குப் பதில் சொல்ல
இயலவில்லையோ....

எங்கள் வீட்டுப் பாலகா... பாலச்சந்திரா....!
உன்னைப்போல
எத்தனை சின்னஞ்சிறுசுகளடா
வீணாய்ப்போயினர்....
இவற்றுக்கெல்லாம்
பதில் கிடைக்குமடா
நீ அமைதி கொள்ளடா...

வீர மண்ணின்
மா வீரனின்
மகனல்லவா நீ...!
நீ விதைக்கப்பட்டவன்தானே
புதைக்கப்படவில்லையே....
என்றாலும்
எங்கள் நெஞ்சம்
பொறுக்கலைடா.....

பகையனின்
அகங்காரம்
அலங்கோலம் ஆகுமடா
அதுதான் அந்தக் கூட்டம்
இந்த ஆட்டம்...
நீ தூங்கடா
நிச்சயம் மலருமடா
நமக்கான ஈழம்...

No comments:

Post a Comment