வந்தது உலகக் கிண்ண
துடுப்பாட்டம்
பிடித்தது இங்கே
சூதாட்டம்....
அதனால், வீரர்கள்
கொண்டாட்டம்
ரசிகர்கள் நாமோ
திண்டாட்டம்...
தந்தியடிப்பு
உன் மீது எனக்கு ஒரு பிடிப்பு
அதனால் நெஞ்சில் பெரும் தடிப்பு..
உன்னை நினைத்து தினமும் துடிப்பு
அதனால் தந்தியடிக்க மனசு முந்தியடிப்பு......
எனினும் கொஞ்சம் பிந்தியடிப்பு
வந்திடுமோ என்று மாறாக உன் பதிலடிப்பு........
அதனால் நெஞ்சில் பெரும் தடிப்பு..
உன்னை நினைத்து தினமும் துடிப்பு
அதனால் தந்தியடிக்க மனசு முந்தியடிப்பு......
எனினும் கொஞ்சம் பிந்தியடிப்பு
வந்திடுமோ என்று மாறாக உன் பதிலடிப்பு........
பணம் பணம் பணம்.........!
தூக்கம் விற்று
வேலை பார்த்தேன்
பணம் வரும் என்று.....
பணம் வந்த பின்பு
தூக்கம் போச்சு
என்னை விற்க.................!
வேலை பார்த்தேன்
பணம் வரும் என்று.....
பணம் வந்த பின்பு
தூக்கம் போச்சு
என்னை விற்க.................!
தென்றலாய்......
தென்றலாய்......
நீ என்னைத் தொட்டபோது
காற்று என்றேன்
அன்று.......
என் உயிரைத் தொடும்போது
சுவாசம் என்கிறேன்
இன்று...
புரிந்து கொண்டேன்.....
இனிமை நிறைந்த
புத்தகம் என்று
நான் நினைந்தேன் உன்னை...
இன்றுதான் புரிந்தது
வெற்றுத்தாள்கள் நிறைந்த
வெறும் கட்டுப்புத்தகம்
நீ என்று....
அம்மா இருந்தவரை......
பசி அறிந்ததில்லை
தூக்கம் மறந்ததில்லை
துக்கம் வந்ததில்லை
அன்புக்குக் குறைச்சல் இருந்ததில்லை
தனிமையில் இருந்ததில்லை
கண்களில் ஒரு துளி நீர் வந்ததுமில்லை.....
அம்மா இருந்தவரை......
என் அம்மாவே.....!
சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சின்னதாய் நான் விட்ட சிறு தவறுக்கு
சிறு தடி எடுத்து
சின்னதாய் ஓர் அடி அடித்துவிட்டு...
சின்னப் பிள்ளைத்தனமாய் நீ அழுவாயே தாயே......
என் செல்லமே என் செல்லமே என்று
செல்லமாய் தினமும்
கொஞ்சி மகிழ்வாயே......
உன் செல்லம் எவ்வளவு கெஞ்சியும்
நீ துயில் கொண்டு விட்டாயே...... என் அம்மாவே....
சின்னதாய் நான் விட்ட சிறு தவறுக்கு
சிறு தடி எடுத்து
சின்னதாய் ஓர் அடி அடித்துவிட்டு...
சின்னப் பிள்ளைத்தனமாய் நீ அழுவாயே தாயே......
என் செல்லமே என் செல்லமே என்று
செல்லமாய் தினமும்
கொஞ்சி மகிழ்வாயே......
உன் செல்லம் எவ்வளவு கெஞ்சியும்
நீ துயில் கொண்டு விட்டாயே...... என் அம்மாவே....
Subscribe to:
Posts (Atom)