துடிக்கிறதடி...

என் நெஞ்சை அள்ளியெடுத்து
பின்னியடித்தவளே!
நீ வீசியடித்த
விழி அடிகளால் - என்
இதயத்தடி தடித்ததடி - ஆதலால்
உன் நினைவுகள் நெஞ்சத்தில் நீந்துதடி ...
இவ்வடிகளால்
உந்தனடி தேடி - தினம்
தந்தியடிக்க முந்தியடித்து வந்தேனடி
ஆனாலும்,
துள்ளியடித்து
உதறியடித்திடுவாயோ என
பிந்தியடிக்கிறதடி என் தந்தியடிப்பு
தந்தியடிப்பு பிந்தியடிப்பதால்
துடிதுடிக்கிறதடி என் இதயத்தடி...

No comments:

Post a Comment