செந்தமிழ்

பட்டுச்சேலையுடுத்தி
நெற்றியிலே திலகமிட்டு
கூந்தலிலே மலராட
கைகளிலே வளையல் கிலிங்கிட
செவியிலே தூங்கணமாடிட
புன்னகை பூர்த்த செவ்விதழுடன்
விழி நிலம் நோக்கிட
அழகு மொழிகொண்டு
பேசிடும் தமிழ் மங்கையே!
வையகமே வியந்திடும்
உன் பண்பாட்டுத் தமிழ்...

இயற்கை நிறைந்தது தமிழ்
பெளர்ணமி நிலவு தமிழ்
கலங்கமற்ற வெண்பால் தமிழ்
மொழியிலே மைல் கல் தமிழ்
 நெஞ்சம் ஒவ்வொன்றும் விரும்புவது தமிழ்
பேசத் துடிப்பதும் தமிழ்...

அசைந்தாடும் பூஞ்சோலையைக் கேட்டுப்பார்
ஓடிவந்து எமைத் தாலாட்டும் தென்றலைக் கேட்டுப்பார்
கானமொன்று பாட மொழி தேடும் குயிலைக் கேட்டுப்பார்
அழகாக அசைந்தாடும் அந்தக் கடலலையைக் கேட்டுப்பார்
மாந்தோப்பிலே செல்வியவள் சிந்திடும் செந்தமிழைக் கேட்டுப்பார்
ஏன்......
காதல் கொண்டிடும் காதல் ஜோடிகளைக் கேட்டுப்பார்
அவை சொல்லிடும் தேன் சுவைத் தமிழின் இனிமையை...

சிப்பிக்குள் முத்து என்பதா
இனிப்பாகி இனிமை சேர்க்கும் தேன் சுளை என்பதா
வர்ணங்கொண்டு வானில் பறக்கும் பஞ்சவர்ணப் பறவை என்பதா
கற்பனையின் சிகரம் என்பதா
தமிழைச் செப்பிட செந்நா துடிக்கிறது
நெஞ்சமோ கற்பனையில் நவக்கிரகம் தாண்டுகிறது.

தமிழுக்கு நிகருண்டோ பாரிலே
தமிழின் செழுமை உண்டோ எங்கேனும்
சொல்லச் சொல்லத் தித்திக்குதே என் நெஞ்சம்
ஊற்றெடுத்து பாய்கிறதே என் சின்ன இதயம்...

No comments:

Post a Comment