செல்லவமாக உன்னோடு
சண்டைபோட வேண்டும்...
நிலவைக் காட்டி - கள்ளமாக
உனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்...
ஒரு கோப்பைக்குள்
இரு கை வைத்து
உணவு தினம் உண்டிட வேண்டும்...
மாறி மாறி
ஒருவர் ஒருவருக்கு ஊட்டிட வேண்டும்...
நம்கமூர் திருவிழாவுக்கு
அன்னநடை போட்டு
நாம் சென்றிட வேண்டும்...
ஜோடியாய் எமைப் பார்த்து
சிறுவர் கூட்டம்
தமக்குள் ஏதோ சொல்லி சிரித்திடவேண்டும்...
என்னோடு தனியாக
நீ மட்டும் உறங்கிடவேண்டும்...
கனவில் பயங்கரம் வந்திட
நாம் இருவரும் அணைத்திடவேண்டும்...
விடிந்தும் எழுந்திடாமல்
ஒரு போர்வைக்குள்
நாம் மறைந்திடவேண்டும்...
இராக்கனவுகளை
சொல்லிச் சிரித்திட வேண்டும்...
ஒரு தொட்டி நீருக்குள்
நீராடவேண்டும்...
குளிரில் நடுங்கி
நாம் அசந்திட வேண்டும்...
ஊஞ்சல் கட்டி
ஆடிட வேண்டும்...
அது அறுந்து - நாம்
கீழே விழுந்திட வேண்டும்...
பட்ட மரம் நாம் நட்டு
நீரூற்றி வளர்த்திட வேண்டும்...
அது சரிந்து
நம்மீது விழுந்திட வேண்டும்...
புத்தாண்டில் புத்தாடை
அணிந்திடவேண்டும்...
கத்தரித் தோட்டத்துக் சேவகன்
நினைவில் வந்திடவேண்டும்...
நாம் இணைந்து
புகைப்படம் எடுத்திடவேண்டும்...
தலையின்றி நம்முருவம்
தெரிந்திடவேண்டும்...
இவையெல்லாம் நடந்திடவேண்டும்...
அதற்கு நீ
என்னுடன் இணைந்திடவேண்டும்...
சண்டைபோட வேண்டும்...
நிலவைக் காட்டி - கள்ளமாக
உனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்...
ஒரு கோப்பைக்குள்
இரு கை வைத்து
உணவு தினம் உண்டிட வேண்டும்...
மாறி மாறி
ஒருவர் ஒருவருக்கு ஊட்டிட வேண்டும்...
நம்கமூர் திருவிழாவுக்கு
அன்னநடை போட்டு
நாம் சென்றிட வேண்டும்...
ஜோடியாய் எமைப் பார்த்து
சிறுவர் கூட்டம்
தமக்குள் ஏதோ சொல்லி சிரித்திடவேண்டும்...
என்னோடு தனியாக
நீ மட்டும் உறங்கிடவேண்டும்...
கனவில் பயங்கரம் வந்திட
நாம் இருவரும் அணைத்திடவேண்டும்...
விடிந்தும் எழுந்திடாமல்
ஒரு போர்வைக்குள்
நாம் மறைந்திடவேண்டும்...
இராக்கனவுகளை
சொல்லிச் சிரித்திட வேண்டும்...
ஒரு தொட்டி நீருக்குள்
நீராடவேண்டும்...
குளிரில் நடுங்கி
நாம் அசந்திட வேண்டும்...
ஊஞ்சல் கட்டி
ஆடிட வேண்டும்...
அது அறுந்து - நாம்
கீழே விழுந்திட வேண்டும்...
பட்ட மரம் நாம் நட்டு
நீரூற்றி வளர்த்திட வேண்டும்...
அது சரிந்து
நம்மீது விழுந்திட வேண்டும்...
புத்தாண்டில் புத்தாடை
அணிந்திடவேண்டும்...
கத்தரித் தோட்டத்துக் சேவகன்
நினைவில் வந்திடவேண்டும்...
நாம் இணைந்து
புகைப்படம் எடுத்திடவேண்டும்...
தலையின்றி நம்முருவம்
தெரிந்திடவேண்டும்...
இவையெல்லாம் நடந்திடவேண்டும்...
அதற்கு நீ
என்னுடன் இணைந்திடவேண்டும்...
No comments:
Post a Comment