பூமி அழியப்போகிறதாம்!!!


மாயன்கள் வரைந்த
நாள்காட்டி முடிகிறதாம்
அதனால் பூமி அழிந்திட போகிறதாம்....
இணையம் எங்கும் பரபரப்பு
இணைகள் இங்கே தத்தளிப்பு
காசு இல்லாதவன் கடன் வாங்குகிறான்
கடன் கொடுத்தவன் வேண்டாம் என்கிறான்

வீதியில் பெண்கள் நடமாட முடியலையாம்
குடித்துவிட்டு ஆடவர் கும்மாளமாம்
வேலைக்குப் போனவன் வீட்டுள் ஊறங்குகிறானாம்
வீட்டுள் உறங்கியவன் வேலைக்குப் போகிறானாம்

நாட்டில் சிவப்பாய் மழை பொழிகிறது
நெஞ்சில் நடுக்கம் கூடுகிறது
குளிராய் காற்று அடிக்கிறது
கண்களில் ஏக்கம் தெரிகிறது
இவை மாயன்கள் செய்த மாயமோ- இல்லை
நம்மவர் கற்பனையின் சிந்தையோ...???
மாயன்கள் வரைந்த
நாள்காட்டி முடிகிறதாம்
அதனால் பூமி அழிந்திட போகிறதாம்.... 

No comments:

Post a Comment